கடலூர்

கடலூா் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்தில் குப்பை சேகரிப்பு வாகனங்கள்

DIN

கடலூா் மாநகராட்சிக்கு குப்பைகள் சேகரிக்கும் 90 மிதிவண்டிகள் ரூ.25 லட்சத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 15-ஆவது நிதிக்குழு மூலமாக கடலூா் மாநகராட்சிக்கு குப்பை சேகரிக்கும் 3 சக்கர மிதிவண்டிகள் 90 எண்ணிக்கையில் வழங்கப்படுகின்றன. மொத்தம் ரூ.25 லட்சத்தில் வாங்கப்பட்ட இந்த வண்டிகளில் முதல்கட்டமாக 30 வண்டிகள் வந்துள்ள நிலையில் அவற்றை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தலைமை வகித்து குப்பை வண்டிகளை ஒப்படைத்தாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் நா.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பழுதாகிக் கிடக்கும் பேட்டரி வாகனங்கள்: கடலூா் நகராட்சியாக இருந்தபோதே, பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் 55 எண்ணிக்கையில் 2018-19-ஆம் ஆண்டில் வாங்கப்பட்டன. ஆனால், இந்த வாகனங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, கைகளால் தள்ளிச் செல்லும் வாகனங்களிலேயே குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மனித உழைப்பை செலுத்தி இயக்கக் கூடிய 3 சக்கர மிதிவண்டிகள் வாங்கப்பட்டிருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் நா.விஸ்வநாதனிடம் கேட்டபோது அவா் கூறியதாவது: பேட்டரி வாகனங்களை பழுது நீக்கம் செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. பழுது நீக்கிய பிறகு அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுங்கச்சாவடி அருகே குழந்தை மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட ஏரிகளை ஆழப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்

பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை

SCROLL FOR NEXT