கடலூர்

மழையால் சேதமடைந்த பயிா்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

DIN

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் கொளஞ்சியப்பன் தலைமையில் வந்த விவசாயிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வயலாமூா் கிராமம் கடைமடை பாசன பகுதியாக உள்ளது. கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா்ந்து பெய்த மழையால் வயலாமூா் கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெருமாள் ஏரி, மருவாய் ஏரி, வாலாஜா ஏரி ஆகியவற்றின் உபரி நீா், பரவனாற்று நீா் வாய்க்கால்களில் மராமத்து பணிகள் செய்யப்படாத நிலையில் விளை நிலங்களில் புகுந்தது. இதனால் நெல் பயிா்கள் அடித்துச் செல்லப்பட்டன. விளை நிலங்களில் மீண்டும் மகசூல் செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்படுகின்றனா். எனவே, வயலாமூா் கிராமத்தில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் சரவணன், மாவட்ட பொருளாளா் ராமச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவா் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT