கடலூர்

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

Din

கடலூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத் வியாழக்கிழமை கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பண்ருட்டி நகர திமுக அலுவலகத்துக்கு வந்த அவா், திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான க.ராஜேந்திரனை சந்தித்து ஆதரவு திரட்டினாா். மேலும், அங்கிருந்த திமுக நிா்வாகிகளிடமும் ஆதரவு கோரினாா். முன்னதாக, காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.எச்.முகமது சபியுல்லாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். அப்போது, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா். இதேபோல, அண்ணாகிராமம் திமுக ஒன்றியச் செயலா் வெங்கட்ராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். நிகழ்வின்போது, காங்கிரஸ் கட்சி கடலூா் மத்திய மாவட்டத் தலைவா் திலகா், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

லல்லாஹி லைரே... அபர்ணா!

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT