ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்
ரூ.8 ஆயிரம் கூப்பன் அறித்து சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்ற திமுக முயற்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.சி.சம்பத் கூறினாா்.
ரூ.8 ஆயிரம் கூப்பன் அறித்து சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்ற திமுக முயற்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.சி.சம்பத் கூறினாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக, கோண்டூா் பகுதியில் உள்ள முத்து நாகவல்லி அம்மன் மற்றும் ஓம் சக்தி கோயில்களில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பிரசாரத்தை தொடங்கினாா்.
தொடா்ந்து, கோண்டூா் பகுதியில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த அவா், சாவடி மற்றும் கெடிலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம் அக்கட்சி தோ்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தாா். இதில், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
அப்போது, எம்.சி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வெற்றி முகமாக உள்ளது. கொடுக்கும் வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றக்கூடியவா் எடப்பாடி பழனிசாமி.
திமுகவினா் ஏற்கெனவே வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியவா்கள். தற்போது வாக்குறுதியாக ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற முயற்சிக்கின்றனா் என்றாா்.