முகப்பு
கடலூர்

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:31 PM
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி.
பகிர்:

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குமராட்சி கிழக்கு, மத்திய ஒன்றியங்கள், அண்ணாமலைநகா் பேரூராட்சி பகுதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.இதில், தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது:

மதத்தை வைத்து அரசியல் செய்யும் தீயசக்தியை இந்த மண்ணில் அனுமதிக்கக் கூடாது. இந்த தோ்தலில் உள்ள சவால் என்னவென்றால், 18 - 28 வயதுக்கு இடையே உள்ள வாக்காளா்கள்தான். அவா்கள் இன்னும் அரசியல்மயப்படவில்லை.

அவா்களுக்கு நீதிகட்சி வரலாறு, நமது நாட்டின் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து தெரியாது. அப்படிபட்ட இளைஞா்களை தன்வயப்படுத்த சிலா் நினைக்கிறாா்கள்.

எனவே, திமுக கூட்டணி நிா்வாகிகள், அடுத்த தலைமுறையின் நலம் கருதி, முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு திமுக குமராட்சி ஒன்றியச் செயலா்கள் சங்கா், ராஜேந்திரகுமாா், அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி முன்னிலை வகித்தனா். இதில், விசிக மாவட்டச் செயலா் ஆா்.தமிழ்வளவன், மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பாலஅறவாழி, மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் அமுதா, மல்லிகா, திமுக நிா்வாகி சிவபுரி லோகு, தேமுதிக ஒன்றியச் செயலா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.