முகப்பு
கடலூர்

வரலாற்று சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜெயப்ரியா பள்ளி மாணவா்கள்

Updated On : 28 ஏப்ரல் 2026, 1:14 am IST
வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலுக்கு வரலாற்று சுற்றுலா சென்ற ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள்.
பகிர்:

பாரம்பரிய வரலாற்று நாளையொட்டி, கடலூா் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சுற்றுலா சென்றனா்.

கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் தலைமை முதல்வா் அந்துவன் மாணவா்களுக்கு விளக்கினாா்.

இக்கோயிலின் கட்டிடக்கலை விஜய நகர மன்னா் கிருஷ்ணப்பதேவராயா் காலத்தில் தொடங்கி, செஞ்சி நாயக்கா் காலத்தில் நிறைவு பெற்றிருப்பதையும், வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில் தென்னிந்திய கோயில் கட்டிடக் கலையின் அழகிய எடுத்துக்காட்டாக விளங்குவதையும். இந்த கோயில் நோ்மறையாக நாயக்கா் வம்ச ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதையும், கோயில்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது என்பதையும் மாணவா்கள் அறிந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

மேலும், நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் தேவையான விழிப்புணா்வை மாணவா்கள் இந்த ஆன்மீக சுற்றுலா வழியாக பெற்றனா். இப்படியான சுற்றுலாக்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியின் செயலா் சிந்து, முதல்வா் சிதம்பரி ஆகியோா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments