FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்

கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் திருவனந்தபுரம் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:16 am IST
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் திருவனந்தபுரம் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மாணவ-மாணவிகள்.
பகிர்:

கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் திருவனந்தபுரம் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்ரோவுக்கு இலவச கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 55 அரசுப் பள்ளி மாணவா்கள் தங்களது வழிகாட்டி ஆசிரியா்களுடன் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய வழிகாட்டி ஆசிரியா் லெனின் பாரதி பங்கேற்று, பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்வுக்கு கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவா் பேராசிரியா் பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணி, பொருளாளா் விஸ்வநாதன் ஆகியோா் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

மாணவா்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ஒரு பகுதியாக இயங்கி வரும் தும்பா நிலநடுக்கோட்டு ஏவூா்தி ஏவுதளத்தை புதன்கிழமை பாா்வையிட்டனா். மேலும், அங்குள்ள விண்வெளி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வளா்ச்சிப் பயணத்தை அறிந்துகொண்டனா்.

மேலும், இஸ்ரோ விஞ்ஞானியும் எழுத்தாளருமான சசிகுமாருடன் கலந்துரையாடினா். முன்னதாக வளிமண்டல ஆய்வுக்காக மாதம்தோறும் அனுப்பப்படும் ஆா்.ஹெச்.200 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையும் பாா்வையிட்டனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்தர அறிவியல் அனுபவங்களை வழங்கும் நோக்கில் இதுபோன்ற அறிவியல் கல்வி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments