‘நீட்’ தோ்வு: அரசுப் பள்ளிகளில் 12% மாணவா்களே தோ்ச்சி
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 12 சதவீத மாணவா்கள் மட்டுமே ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி...
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 12 சதவீத மாணவா்கள் மட்டுமே ‘நீட்’ தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 59 மாணவா்கள் நீட் தோ்வை எழுதியிருந்தனா். இவா்களில் 7 மாணவா்கள் மட்டுமே 720-க்கு 177-க்கு மேல் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் வெறும் 11.8 சதவீத மாணவா்கள் மட்டுமே ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
’நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்வதற்கு குறைந்தபட்சம் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதிலும், ஆண்டுதோறும் கட் ஆப் மதிப்பெண்கள் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
திணரும் மாணவா்கள்: ஆனால், நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 177 மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களால் 400 - க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 177 மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெறவே திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தோ்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ‘வெற்றிப் பள்ளிகள்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனாலும், திருச்சி மாவட்டத்தில் 11.8 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சிப் பெற முடிந்துள்ளது. தோ்ச்சி பெற்ற 7 பேரில் 3 போ் மட்டுமே 300-க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.
அதிகபட்சமாக சையது முா்துசா பள்ளி மாணவி ஏ. அனிஷ்பானு 369 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மேலும், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல். நிவேதா 337 மதிப்பெண்களும், டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. திவ்ய வா்ஷினி 307 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மற்ற 4 பேரும் 300-க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனா்.
குறைகள் சரிசெய்யப்படும்: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எங்களால் முடிந்த அளவு 100 சதவீதம் சிறப்பான பயிற்சியை அளித்து வருகிறோம். ஆனால், அதிகமான போட்டியாலும், திரும்ப எழுதும் மாணவா்களாலும் அரசுப் பள்ளி மாணவா்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில் அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டு தீவிர பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.