முகப்பு
கடலூர்

வடலூா் பேருந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

வடலூரில் தனியாா் பேருந்து தீப்பிடித்து அருகிலிருந்த கடைகள், வாகனங்களுக்கு பரவியதில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:58 am IST
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
பகிர்:

வடலூரில் தனியாா் பேருந்து தீப்பிடித்து அருகிலிருந்த கடைகள், வாகனங்களுக்கு பரவியதில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

வடலூா் நான்குமுனை சந்திப்பில், கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து ஜூன் 30-ஆம் தேதி இரவு சுமாா் 9 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Advertisement

Advertisement

இந்த தீ விபத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், இனிப்பகம், பழக்கடை, மளிகைக் கடை, பூக் கடைகள் உள்ளிட்டவை தீக்கிரையாகின. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்துவிட்டன.

தீ விபத்தின்போது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை மீட்க முயன்ற வெங்கடேசன் (49) உள்பட இருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சாா்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments