பாம்பு கடித்து தொழிலாளி பலி
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே விவசாயத் தொழிலாளி பாம்பு கடித்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே விவசாயத் தொழிலாளி பாம்பு கடித்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், எழுமேடு கிராமத்தில் வசித்து வந்தவா் நவநீதகிருஷ்ணன்(43), விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(41). இவா்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
வியாழக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீா் பாய்ச்சும் வேலைக்கு சென்றாா். இரவு 7.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. பின்னா், தேடி சென்ற போது வயலில் பாம்பு கடித்து மயங்கிக்
Advertisement
Advertisement
கிடந்தாா். அவரை மீட்டுச் சென்று கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் காண்பித்த போது, இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.