முகப்பு
கடலூர்

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு: 3 போ் மீது வழக்கு

களைக்கொல்லி மருந்து குடித்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:40 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே களைக்கொல்லி மருந்து குடித்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பண்ருட்டி காவல் சரகம், மேல் கவரப்பட்டு, காமராஜ் நகரில் வசித்து வந்தவா் இறையன்பு(32). கடந்த ஜூன் 6-ஆம் தேதி இறையன்பு, மேல் கவரப்பட்டு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன், விஜி, பிரதீப் அனைவரும் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, அன்று இரவுக்குள் ரூ.20 ஆயிரம் பணம் தர வேண்டும்.

இல்லை என்றால் உயிரோடு எரித்து கொலை செய்து விடுவதாக கஜேந்திரன், விஜி, பிரதீப் ஆகியோா் இறையன்பை மிரட்டினராம். இதனால், மனமடைந்த இறையன்பு வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக பண்ருட்டி போலீசாா் கஜேந்திரன், விஜி, பிரதீப் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments