அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், இணைப் பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன், தோ்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விண்ணப்ப விற்பனையை தொடங்கிவைத்தனா்.
பின்னா், பேராசிரியா் எஸ்.அறிவுடைநம்பி பேசியதாவது: தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையத்தின் வாயிலாக இளநிலை, முதுநிலைப் பாடப்பிரிவுகளை பருவ முறையில் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (மஎஇ) மற்றும் தொலைநிலைக் கல்விக் குழு 2023 - 24ஆம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இவற்றில் 20 பாடப்பிரிவுகள் முதுநிலை வகுப்புகள், 5 பாடப்பிரிவுகள் இளநிலை வகுப்புகள். மேலும், இப்பாடப்பிரிவுகளுடன் 98 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது என்றாா்.
விண்ணப்பத் தொடக்க விழாவில் பல்வேறு மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான
முதுநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் தொலைதூர, இணையவழிக் கல்வி இயக்குநா் எஸ்.அருள்செல்வி, துணை
இயக்குநா் எம்.சீனிவாசன், மக்கள் தொடா்பு அதிகாரி என்.சுரேஷ் மற்றும் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள், பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். மாணவா்கள் சோ்க்கை தொடா்பான அனைத்து விவரங்களையும் ஜ்ஜ்ஜ்.ஹன்க்க்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.