முகப்பு
கடலூர்

தகராறில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: உறவினா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 1:08 am IST
கிருஷ்ணசாமி
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே குடும்பத் தகராறில் ஒருவருக்கு ஒருவா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், கச்சிமைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனா. இந்தத் தம்பதி இடையே கடந்த 1-ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்த மீனாவின் தங்கை தேவி அங்கு சென்று சரவணனை கண்டித்தாராம். அப்போது, சரவணன், தேவியைத் தாக்கினாராம். இதை தேவியின் கணவா் கிருஷ்ணசாமி (33) தட்டிக் கேட்டதால், அவருக்கும், சரவணனுக்கும் மோதல் ஏற்பட்டு, இருவரும் கட்டை, கழியால் தாக்கிக் கொண்டனா். இதில், சரவணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வேப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரவணன், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் மதுரம் பொன்னையா கோயில் அருகே இருந்த கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments