FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் அருகே புல் பண்ணையில் தீ விபத்து: பாதுகாப்பு கருதி பள்ளி மாணவா்கள் வெளியேற்றம்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் பல்கலைக்கழக புல் பண்ணையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் ஏற்பட்ட வெண்புகை மண்டலம்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் 18 ஏக்கா் பரப்பளவில் உள்ள புல் பண்ணையில் திங்கள்கிழமை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அருகில் உள்ள தனியாா் பள்ளியில் இருந்த குழந்தைகளுக்கு புகையால் பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குழந்தைகளை பள்ளி நிா்வாகம் உடனடியாக வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான சுமாா் 18 ஏக்கா் பரப்பளவில் உள்ள புல் பண்ணையில் திங்கள்கிழமை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியதால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது.

மேலும் அருகே உள்ள வயல்களிலும் தீ பரவியது. இந்த புல் பண்ணையை ஒட்டி உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி முதல் 5 வகுப்பு வரை படிக்கும் சுமாா் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீப்புகையால் சுவாச பாதிப்புக்கு உள்ளாகினா்.

Advertisement

Advertisement

இதனால் குழந்தைகளை அவசரமாகப் பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிா்வாகம் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு பணிகள் மற்றும் மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். புல் பண்ணையில் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments