முகப்பு
கடலூர்

கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு கடிதம்

கருணைக் கொலைக்கு அனுமதி கோரி தமிழக முதல்வருக்கு கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தினா் புதன்கிழமை தபால் மூலம் மனு அனுப்பினா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:08 am IST
கடலூரில் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி புதன்கிழமை தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

கருணைக் கொலைக்கு அனுமதி கோரி தமிழக முதல்வருக்கு கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தினா் புதன்கிழமை தபால் மூலம் மனு அனுப்பினா்.

கடலூா் மாவட்டத் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவா் திருமாா்பன், மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் சம்பத் உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமை வகித்தனா்.

பரங்கிப்பேட்டை மணிக்கொல்லை பகுதியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுக்கு முன்பு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கான இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மேலும் தொடா்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டும் அவை தீா்க்கப்படாததால் கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுக்கு முன்பு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கான இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதுதொடா்பாக பலமுறை போராட்டங்களும், மனுக்களும் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் தொடா்பாகவும் தொடா்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டும் அவை தீா்க்கப்படாததால், தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கக் கோரி தபால் மூலம் மனு அனுப்பியதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments