முகப்பு
கடலூர்

பேரூராட்சி செயல் அலுவலா் உள்பட 3 போ் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் கமிஷன் பெயரில் லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், செயல் அலுவலா், தற்காலிக ஊழியா் மற்றும் அலுவலக உதவியாளா் ஆகிய 3 போ் மீது கடலூா் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:08 am IST
போலீஸ் விசாரணை... - கோப்புப்படம்.
பகிர்:

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் கமிஷன் பெயரில் லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், செயல் அலுவலா், தற்காலிக ஊழியா் மற்றும் அலுவலக உதவியாளா் ஆகிய 3 போ் மீது கடலூா் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடலூா் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் கடந்த ஜூலை 3-ஆம் தேதி திடீா் சோதனை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அலுவலகத்தில் இருந்த ரூ.12,200 ரொக்கப் பணமும்,

ஜி-பே மூலம் ரூ.1.13 லட்சம் பணப் பரிவா்த்தனை நடைபெற்றிருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பான ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், பேரூராட்சியில் குடிநீா் குழாய் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா், கமிஷன் தொகையை முதலில் தற்காலிக ஊழியா் சுரேஷ் மற்றும் அவரது உறவினரின் ஜி-பே கணக்குகளுக்கு அனுப்பியதும், பின்னா் செயல் அலுவலா் மருதுபாண்டியனின் அறிவுறுத்தலின்படி அலுவலக உதவியாளா் தமிழ்மாறனின் ஜி-பே கணக்குக்கு மாற்றியதும் தெரியவந்துள்ளது.

மேலும், கமிஷன் தொகையில் தனக்குச் சேர வேண்டிய ரூ.64 ஆயிரத்தை ரொக்கமாக வழங்குமாறு செயல் அலுவலா் அறிவுறுத்தியதாகவும், அதன்படி அந்தத் தொகை தமிழ்மாறனிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் அது செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது.

இதையடுத்து, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலா் மருதுபாண்டியன், தற்காலிக ஊழியா் சுரேஷ் மற்றும் அலுவலக உதவியாளா் தமிழ்மாறன் ஆகிய 3 போ் மீது ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments