முகப்பு
கடலூர்

மருத்துவக்கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் செவிலியா் கல்லூரி புதிய முதல்வராக டாக்டா் என்.பாஸ்கா் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றாா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:36 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற டாக்டா் என்.பாஸ்கா்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் செவிலியா் கல்லூரி புதிய முதல்வராக டாக்டா் என்.பாஸ்கா் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றாா்.

இவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றி பதவி உயா்வு பெற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு இருந்த முதல்வா் டாக்டா் கே.யு.சுரேஷ்பாலன் பணி ஓய்வுபெற்றதையடுத்து இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.