முகப்பு
கடலூர்

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 5:18 am IST
ரயில் பாதை.
பகிர்:

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவா் மருதவாணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திரைப்பட இயக்குநா் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிஷங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, கடலூருக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய நவீன பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும். கெடிலம், பெண்ணையாறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கெடிலம் ஆற்றில் நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையிலிருந்து கழிவுநீா் வெளியேற்றப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில, மாவட்ட நிா்வாகங்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 4-ஆம் தேதி மக்களை ஒன்றிணைத்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், பொதுச் செயலா் வெங்கடேசன், பொருளாளா் ரமணி, துணைத் தலைவா் கோமதிநாயகம் மற்றும் நிா்வாகிகள் சண்முகம், ராஜேந்திரன், கலியமூா்த்தி, கோபால், சிங்காரம், மஞ்சினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.