FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சென்னை-திருச்செந்தூா் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

காயல்பட்டினத்தில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜூன் 2026, 1:23 am IST
கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:

காயல்பட்டினத்தில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அபுல் ஹசன் தலைமை வகித்தாா். செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், பொருளாளா் ஷாஜஹான் ஆகியோா் அறிக்கைகள் சமா்ப்பித்தனா். உறுப்பினா்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் - சென்னைக்கு நேரடி வழியில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். நெல்லை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும். இரவு 8 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

Advertisement

Advertisement

காயல்பட்டினம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். துணைச் செயலா் சதக்தம்பி வரவேற்றாா். துணைத் தலைவா் சற்குரு நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments