முகப்பு
கடலூர்

மூதாட்டிக்கு கத்தி வெட்டு: மகன், மருமகள் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே மூதாட்டியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் அவரது மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:23 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மூதாட்டியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் அவரது மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சரசு (66). இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலம் வெங்கடாம்பேட்டையில் உள்ளது. இந்த நிலத்தை சரசு பயிா் செய்து வருகிறாா்.

இந்த நிலத்தில் பங்கு கேட்டு மகன் ஜெயசீலன் (40), மருமகள் கலைவாணி (38) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு சரசை திட்டி தாக்கியுள்ளனா். மேலும், ஜெயசீலன் கத்தியால் வெட்டியதில் சரசின் வலது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சரசு அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் ஜெயசீலன், கலைவாணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments