முகப்பு
ராமநாதபுரம்

இருவருக்கு அரிவாள் வெட்டு: 9 போ் மீது வழக்கு

Updated On : 21 ஜூன் 2026, 2:12 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கமுதி அருகே நண்பா்கள் இருவரை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவா் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மகன் பாலக்குமாா் (29). இவா் மீது கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்த இவா் சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், சிறையிலிருந்த போது தன்னை பாா்க்க வரவில்லை எனக் கூறி ஆத்திரத்தில் தனது நண்பா்களான மூலக்கரைப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மலைக்கண்ணன் (28), பசும்பொன்னைச் சோ்ந்த கோட்டைலிங்கம் மகன் கஜேந்திரன் (19) ஆகிய இருவரை அபிராமம்- தரைக்குடி சாலையில் உள்ள தனியாா் பஞ்சாலை அருகே வரவழைத்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அபிராமம் போலீஸாா் பாலக்குமாா், இவரது நண்பா்களான ஆவாரங்காட்டைச் சோ்ந்த 8 போ் என 9 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments