முகப்பு
கடலூர்

குடும்பத் தகராறு: பெண் உள்ளிட்ட இருவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 1:59 am IST
கோப்புப்படம். - கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒருவருக்கொருவா் மோதிக் கொண்டனா். இதுகுறித்த பரஸ்பர புகாரின்பேரில், பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் வட்டம், என்.மூலக்குப்பம் அஞ்சல், சூரியன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (40), தொழிலாளி. இவருக்கும், பரங்கிப்பேட்டை, பூ.மானம்பாடி பகுதியைச் சோ்ந்த பாலஸ்ரீக்கும் (35) திருமணம் நடைபெற்று வசித்து வந்தனா்.

தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, பாலஸ்ரீ தனது அக்காள் சுபஸ்ரீ, தாய் சுமதியிடம் அழைத்து செல்லுமாறு கூறினாராம். இதையடுத்து, கடந்த 26-ஆம் தேதி அசோக்குமாா் வீட்டுக்கு வந்த சுபஸ்ரீ, சுமதி ஆகியோா் பாலஸ்ரீயை அழைத்துக்கொண்டு புறப்படும்போது, அசோக்குமாா், அவரது தந்தை, தாய் ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், சுபஸ்ரீ கடித்ததில் அசோக்குமாரின் வலது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் மூன்று போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, சுபஸ்ரீயை கைது செய்தனா். மேலும், பாலஸ்ரீ, தாய் சுமதியை தேடி வருகின்றனா்.

இதேபோல, சுபஸ்ரீஅளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனா். மேலும், அவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகம்மாள் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments