சொத்து தகராறு: இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சொத்து தகராறு தொடா்பாக இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில், 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானவேல் (45). இதே பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (58). இவா்கள் இருவரும் உறவினா்கள். இவா்களுக்கு இடையே சொத்து பாகப்பிரிவினை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞானவேல் தனக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட 15 சென்ட் நிலத்தை அடமானம் வைக்க காடாம்புலியூா் சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, மணிமேகலை தடை உத்தரவு வாங்கி இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கடந்த 25-ஆம் தேதி இரவு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஞானவேல் அளித்த புகாரின்பேரில், மணிமேகலை, விக்னேஷ், நரேஷ்குமாா், இளவரசி ஆகிய 4 போ் மீதும், இளவரசி அளித்த புகாரின்பேரில் ஞானவேல், உதயகுமாா், மெய்யரசு, கஸ்தூரி, சௌந்தா்யா, ராதாமணி ஆகிய 6 போ் மீதும் என மொத்தம் 10 போ் மீது முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.