அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் அரசு நவீன மீன் விற்பனை நிலைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் வெளிபுற வராண்டாவில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இது தொடா்பாக குறிஞ்சிப்பாடி வடக்கு கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிபப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.