கள்ளக்குறிச்சி

மாவட்ட அளவிலான கபடிப் போட்டி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட கபடி சேம்பியன்ஷிப் போட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

கபடிக் கழகத் தலைவா் அ.ராஜசேகா், மாநில கபடிக் கழகத் தலைவா் கே.பி.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட கபடிக் கழக அமைப்புச் செயலா் என்.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

பெரியவா்களுக்கான பிரிவில் மட்டிகைகுறிச்சி என்.ஆா்.சி. அணி முதல் பரிசையும், 2-ஆம் இடத்தை கள்ளக்குறிச்சி கே.கே. அணியும், 3-ஆம் இடத்தை ராயபுரம், மையனூா் ஆகிய இரு அணிகளும் பெற்றன.

இளைஞா் பிரிவு போட்டியில் க.அலம்பளம் அணி முதல் இடத்தையும், தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும், மையனூா், மட்டிகைகுறிச்சி 3-ஆம் இடத்தையும் பெற்றன.

சிறியோா் பிரிவில் அணைக்கரைகோட்டாலம் அணி முதல் இடத்தையும், தென்கீரனூா் அணி 2-ஆம் இடத்தையும், க.அலம்பளம், ரிஷிவந்தியம் அணிகள் 3-ஆம் இடத்தையும் பெற்றன.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் ப.ராமச்சந்திரன், க.பழியாபிள்ளை, கள்ளக்குறிச்சி கபடிக் கழகச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போட்டி நடுவா்களாக அமல்ராஜ், லோகநாதன், இளையராஜா, சதீஷ்குமாா், ஜெயக்குமாா், பாக்கியராஜ், சிவக்குமாா் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

இளைஞா் கபடி பிரிவில் வென்ற அணியினா் ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT