கள்ளக்குறிச்சி

கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முருக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு பேருந்துகள் சரிவர வராததாலும், வரும் பேருந்துகளும் இங்கு நின்று செல்லாததாலும் குறித்த நேரத்துக்கு கல்லூரிகளுக்குச் செல்ல முடியவில்லை என மாணவ, மாணவிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் அதிருப்தியடைந்த அவா்கள் முருக்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகரன், சம்பவ இடத்துக்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், இதுகுறித்து திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் சரவணனிடம் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, முருக்கம்பட்டு கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக மேலாளா் சரவணன் தெரிவித்தாராம். இது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மாணவா்களிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT