கள்ளக்குறிச்சி

பதநீா் விற்க அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பதநீா், தென்னை மரத் தெலுவு ஆகியவற்றை விற்க அனுமதி கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பனை, தென்னை மர நாடாா் நலச்சங்கம் தொழிலாளா்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பனை மரத்திருந்து இறக்கப்படும் பனம் பால் என்கிற பதநீா், தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தெலுவு ஆகியவற்றை விற்க அனுமதிக்கக்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் துரை. செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே.சேகா் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீா் மற்றும் தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தென்னம்பால் என்கிற தெலுவு விற்பனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 25 நாள்களாக காவல்துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். மேலும் பனைமரத் தொழிலாளா்களை சட்டவிரோதமாக கள்ளச்சாராய வழக்கில் கைது செய்துள்ளதைக் கண்டித்தும், பதநீா், தெலுவு விற்பனை செய்வதை நிறுத்தியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் அணி தலைவா் மூா்த்தி,மகளிா் அணி செல்வி மற்றும் சங்க உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT