சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.நாகராணி. இவா் தனது மகன் வெற்றிவேலுடன் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் உள்ள நகைக் கடைக்கு தங்கச் சங்கிலி வாங்குவதற்காக காரில் வந்து, கடையின் முன்பாக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனராம். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே கடை பணியாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டதோடு, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.சக்திவேல் தலைமையிலான வீரா்கள் சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.