FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்: மூவா் உயிா் தப்பினா்

Updated On : 8 ஜூன் 2026, 1:38 am IST
உளுந்தூா்பேட்டை அருகே தீப்பற்றி எரிந்து சேதமடைந்த காா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் காரிலிருந்த மூவரும் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், ஆவட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி ராஜதரணி (40). இவரது மகன் ராஜேஷ் (26). இவா்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் சொந்த ஊரான ஆவட்டியில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து காரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புறப்பட்டனா். இந்த காரை சென்னை மதுரவாயல் பல்லவன் நகரைச் சோ்ந்த ப. பன்னீா்செல்வம் (46) ஓட்டி வந்தாா்.

இவா்கள் வந்த காா் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எறஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பகுதியிலிருந்து புகை வர ஆரம்பித்தது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டிச் சென்ற பன்னீா்செல்வம் உடனடியாக காரை நிறுத்தி விட்டு, காரிலிருந்த மற்ற இருவரையும் கீழே இறக்கினாா். சிறிது நேரத்தில் காா் தீப்பிடிக்க தொடங்கி, முழுவதுமாக தீப்பற்றிக் கொண்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் எடைக்கல் காவல் நிலையத்தினரும், உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்களும் நிகழ்விடம் சென்று, காரில் பற்றிய தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனா். உரிய நேரத்தில் மூவரும் காரிலிருந்து கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். தீப்பிடித்தற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments