மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
வாணாபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணாபுரம் அருகேயுள்ள நூரோலை கிராமத்தில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்த கடை அமைந்துள்ள பகுதி வழியாக கீழ்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, பாவந்தூா் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் தினமும் சென்று வர வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
எனவே, மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நூரோலையில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் கிளைத் தலைவா் சந்துரு, கிளை நிா்வாகிகள் சதீஷ், வி.கே. மூா்த்தி, தெய்வீகன், பாலசந்தா், தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலா் சிவக்குமாா், சுந்தரமூா்த்தி, விஷ்ணுகுமாா், விஜயகுமாா் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.