அரசு பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்: எம்எல்ஏ வழங்கினாா்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு, விலையில்லா பாடப்புத்தகங்களை தொகுதி எம்.எல்.ஏ., சி.அருள் விக்னேஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு, விலையில்லா பாடப்புத்தகங்களை தொகுதி எம்.எல்.ஏ., சி.அருள் விக்னேஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.திறந்த நாளிலேயே மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இரா.கீதா தலைமையிலும், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி
இளவரசி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., சி.அருள் விக்னேஷ் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்களை வழங்கி நன்கு பயின்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற வேண்டும் எனப் பேசினாா்.
Advertisement
Advertisement
இந் நிகழ்வில் மேலாண்ணைக்குழு உறுப்பினா்கள் சங்கா், இளையராஜா மற்றும் ஆசிரியா்கள் பலரும் பங்கேற்றனா்.
அதே போல கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் மோ.கலாபன் தலைமை வகித்தாா். இந்த பள்ளி மாணவா்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினா் சி.அருள் விக்னேஷ் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினாா்.இந் நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இரா.சுப்ராயலு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி காயத்ரிமற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்கள், பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.