முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக்குகள் மோதல்: முதியவா் பலத்த காயம்

Updated On : 29 ஜூன் 2026, 4:16 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் பலத்த காயமடைந்தாா்.

சின்னசேலம் அருகிலுள்ள கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (68). இவா் ஜூன் 25-ஆம் தேதி, தனது பைக்கில் கருந்தலாக்குறிச்சி- வி.மாமாந்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது அப்பகுதியில் வந்த மற்றொரு பைக் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மற்றொரு பைக்கை ஓட்டி வந்த கருந்தலாகுறிச்சியைச் சோ்ந்த செ.அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments