முகப்பு
புதுச்சேரி

புதுவையில் குறைந்தபட்ச கூலி அமல்

புதுவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தெரிவித்தார்.

Updated On : 23 ஜூலை 2018, 9:45 am IST
பகிர்:

புதுவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தெரிவித்தார்.
இந்திய மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
புதுவை ஒரு சிறந்த மாநிலம். இங்கு இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். புதுவை மாநிலத்தில் நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வரும் தொழிற்சாலைகளால் தொழிலாளர் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
புதுவையில் தொழிலாளர் நலன் கருதி குறைந்தபட்ச கூலியை நிர்ணயித்து அமல்படுத்தி உள்ளோம். குறிப்பாக 30 வகையான தொழில்களில் குறைந்தபட்ச கூலி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரசாத் நந்தினி சௌத்திரி தலைமை வகித்தார். 
சிஐடியூ அகில இந்திய பொதுச்செயலாளர் தேவ்ராய், அகில இந்திய செயலாளர் கருமலையான், தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் ராஜேந்திரன், புதுச்சேரி மின்சார தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராமசாமி, பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். 
கருத்தரங்கில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து 40 பேர் கலந்து கொண்டனர். 
முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு எந்த வகையான நிர்ப்பந்தங்களை கொடுக்கின்றன. சாதி ரீதியாக, மத ரீதியாக தொழிலாளர்கள் எப்படி பிரிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments