புதுச்சேரி

கணினி போட்டி: மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

தேசிய அளவிலான கணினி போட்டியில் புதுவை ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை ( ஙஏதஈ), அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவால் (அஐஇபஉ) தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்( நஐஏ) வன்பொருள் மற்றும் மென்பொருள் பதிப்பு 2019 போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. புதிய இந்தியா கனவை நிறைவேற்ற புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஒருங்கிணைப்பது அவசியம் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். நிகழ் ஆண்டு 2019-இல் நாடு முழுவதும் 48 மையங்களில் இந்த போட்டி நடைபெற்றது. மேலும், 2ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்தத் திட்டமானது சுகாதாரம்,  விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் மாணவர்களின் வடிவமைப்புகள் அனைத்தும் இந்திய பொருளாதார சந்தையை மேம்படுத்திடும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த மாணவர்கள் "எண்ட்ரன்ஸ் கேட்சட்' என்னும் ஈபில் கருவியை உருவாக்கினர்.  இந்தக் கருவியின் மூலமாக,  மாரடைப்பு ஏற்படுவதற்கு 9-10 நிமிடங்கள் முன்பாகவே அறியலாம்.
வன்பொருள் பதிப்பு 2019-இல் இந்த மாபெரும் கருவியை உருவாக்கிய மாணவர்களான ஹரிணி, ஜெயலட்சுமி,  பவித்ரா,  சந்துரு,  பரத்,  சூரியா  ஆகியோருக்கு முதல்பரிசு மற்றும் ரூ. 50,000 ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.  சிறப்பிடம் பிடித்த மாணவர்களை கல்லூரியின் தலைவர் நிர்வாக இயக்குநர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வருமான முனைவர் வி.எஸ்.கே. வெங்கடாசலபதி,  துறைத் தலைவர் ஆர். ராஜு மற்றும்  அனைத்து பேராசிரியர்களும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT