புதுச்சேரி

கோயில் நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு

DIN


புதுவை இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோயில் நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு கோயில்களை திறம்பட 
நிர்வகிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களை நிர்வகிக்கும் அறங்காவல் குழுவின் தலைவர்கள், கோயில் செயலர்கள், தனி அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பில் இந்து சமய நிறுவனங்களின் ஆணையர் தி. சுதாகர், மேலாளர் ஜெயந்தி, முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாசப் பெருமாள் கோயில் தேவஸ்தான அதிகாரி துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.
பயிற்சி வகுப்பை இந்து சமய நிறுவனங்கள் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பயிற்சி வகுப்புகள் கொம்யூன் வாரியாக நடைபெறும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT