புதுச்சேரி

டெங்கு கொசு உற்பத்தி  ஆதாரங்களை அழிக்கும் சிறப்பு முகாம்

DIN

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தி ஆதாரங்களைக் கண்டறிந்து அழிக்கும் சிறப்பு முகாம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
தேசிய கொசு - பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த முகாம், மலேரியா உதவி இயக்குநர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவி ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பஞ்சர் கடைகள், சிமென்ட் சிலாப் தயாரிப்பு கடைகள், இளநீர் விற்பனை கடைகள், புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட நெல்லித்தோப்பு சிக்னல் அருகிலிருந்து தொடங்கி வில்லியனூர், அரியூர், திருபுவனை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஆய்வு நடத்தி, கொசு உற்பத்தி ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT