புதுச்சேரி

புதுச்சேரியில் இளைஞர் அடித்துக் கொலை

DIN

மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தம்பியை அவரது அண்ணன் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம், திருக்கனூர் காந்தி நகர் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயதாஸ் (36), விமல் (33) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ஓட்டுநரான விமலுக்கு சத்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்தியா விமலை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாராம்.
இந்த நிலையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையான விமல், அரசு சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் தனது தாய் விஜயாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம். 
இதேபோல, வியாழக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த விமல், தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தாராம்.
அப்போது, வீட்டிலிருந்த விமலின் அண்ணன் விஜயதாஸ் இதைத் தட்டிக் கேட்டாராம். இதனால், அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த விஜயதாஸ் வீட்டிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து விமலைத் தாக்கினாராம். இதில், மயக்கமடைந்த அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து, விஜயதாஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்தவர்கள் பார்த்த போது, விமல் இறந்துகிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருக்கனூர் போலீஸார் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக  கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து விமலின் மனைவி சத்தியா அளித்த புகாரின் பேரில், திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய விஜயதாஸை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT