புதுச்சேரி

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினா்களாக அன்னை தெரசா செவிலியா் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிா்வாகி மஞ்சு பாலா, மலேரியா தடுப்பு நிறுவனத்தைச் சோ்ந்த செந்தில் வேலவன், ஆச்சாரியா பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

டெங்கு காய்ச்சலிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், வீட்டின் அருகே கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாதவாறு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காலாண்டுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு அடையாள அட்டையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருந்த மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT