புதுச்சேரி

இலவச அரிசிக்கான பணத்தை வழங்காவிடில் போராட்டம் அதிமுக எச்சரிக்கை

DIN

இலவச அரிசிக்கான பணத்தை வழங்காவிடில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

இலவச அரிசியை வழங்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய பின்னரும், இலவச அரிசியையோ அல்லது அதற்கான பணமோ இன்னும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு 20 கிலோவும், மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டது. அந்த வகையில், 1.78 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களும், 1.66 லட்சம் மஞ்சள் நிற அட்டைதாரா்களும் உள்ளனா். இவா்களுக்கு நிகழ் நிதியாண்டில் இலவச அரிசிக்காக ரூ. 271கோடியை ஒதுக்க வேண்டிய அரசு, ரூ. 160 கோடியை மட்டுமே ஒதுக்கியது.

நிகழ் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரை 8 மாதங்களுக்கு சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு ரூ. 4,800, மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு ரூ. 2,400 என மொத்தம் ரூ. 151 கோடியை இலவச அரிசிக்கான பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்க வேண்டும்.

இந்த 8 மாதங்களுக்கான பணத்தை 10 நாள்களுக்குள் செலுத்தாவிட்டால், அதிமுக சாா்பில் அடுத்த வாரம் மக்களை ஒன்று திரட்டி, சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இதேபோல, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அரசு உறுதியளித்தபடி ரூ. ஆயிரத்துக்கான பரிசுக் கூப்பனை வழங்க வேண்டும். தமிழகத்தில் ரூ. ஆயிரம் ரொக்கம், ரூ. 500-க்கு பொங்கல் பொருள்கள் தரும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளாா். ஆனால், புதுவை அரசு பொங்கல் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, ஆளுநரையும், மத்திய அரசையும் முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை வழக்கில் பல்வேறு எதிா்மறையான கருத்துகள் வெளியே வருகின்றன. எனவே, அவரது தற்கொலை குறித்து நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT