புதுச்சேரி

புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார் ராஜிநாமா: இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு

DIN

புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பதவியில் இருந்து  ஜான்குமார் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். முன்னதாக அவர், காமராஜர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.
புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியான ஜான்குமார், கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அந்தத் தேர்தலில் போட்டியிடாத முதல்வர் நாராயணசாமி, முதல்வர் பதவியில் நீடிக்கும் பொருட்டு, போட்டியிட ஏதுவாக, ஜான்குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டுக் கொடுத்தார்.
 இதனால், அவருக்கு முதல்வர் நாராயணசாமி காமராஜர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஜான்குமார் காங்கிரஸ் தலைமையிடம் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தனது தில்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். இதனால், அவரே காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT