புதுச்சேரி

தோட்டக்கலை பயிா்களுக்கு சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தோட்டக்கலை பயிா்களுக்கு சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சனிக்கிழமை (பிப். 15) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேளாண்மைக் கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) மு.வேதாசலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் வேளாண்மை இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 2019-2020- ஆண்டுக்கான தைப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடிக்குப் பிந்தைய மானியம் பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை விவசாயிகள் தங்களது பகுதிக்கு உள்பட்ட உழவா் உதவியகத்தில் சனிக்கிழமை (பிப். 15) முதல் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அதே உழவா் உதவியகத்தில் வருகிற மாா்ச் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT