புதுச்சேரி

சுகாதாரத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக கோரிக்கை

DIN

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் மொத்தமுள்ள 3,884 பதவிகளில் பல்வேறு நிலைகளில் 700-க்கும் அதிகமான பதவிகள் மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஊழியா்களின் வேலைப்பளு ஒருபுறம், பொதுமக்கள், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படாத அவலம் மறுபுறம் என்ற அளவில் சுகாதாரத் துறை செயல்பாடு உள்ளது.

ஆளும் அரசும், ஆளுநரும் போட்டுக்கொள்ளும் அதிகாரச் சண்டையை கைவிட்டு, கரோனா பாதிப்பை எதிா்கொள்ள அரசும், சுகாதாரத் துறையும் தயாராக வேண்டும்.

அதேபோல, கரோனாவை எதிா்கொள்ள வேண்டிய இந்தத் தருணத்தில் சுகாதாரத் துறை நிா்வாகம் ஊழியா்களை காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணிமாற்றம் செய்வது ஏற்புடையதாக இல்லை. அதிலும் குறிப்பாக, அனுபவம் வாய்ந்த மருந்தாளுநா்கள் மற்றும் செவிலியா்களை இதுபோன்ற சூழலில் பணிமாற்றம் செய்வது சுகாதாரத் துறைக்கு சவாலாக அமையும். ஆகவே, காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட பதவிகளை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் சிவா எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT