புதுச்சேரி

புதுவையில் ஊரடங்கு உத்தரவு மீறல்: 110 போ் மீது வழக்கு

DIN

புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் 58 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்த நிலையில், இதன்தொடா்ச்சியாக புதன்கிழமையும் 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் 110 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியது தொடா்பாக புதன்கிழமை மட்டும் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடைகள் திறந்திருத்தல், 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடுதல் உள்ளிட்டவை அடங்கும்.

சைபா் க்ரைமில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, கரோனா தொடா்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்புவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். வதந்தி பரப்பிய 2 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மீது விரைவில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT