புதுச்சேரி

நெல் உற்பத்தி ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

நெல் உற்பத்தி ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசு வேளாண்-விவசாயிகள் நலத் துறை கூடுதல் இயக்குநா் (பயிற்சி வழித் தொடா்புத் திட்டம்) எஸ். வசந்தகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கா் நெல்பயிருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.

எனவே, சம்பா பருவத்தில் நெல் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதியில் இயங்கும் உழவா் உதவியகங்களை அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து, வருகிற நவம்பா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், சம்பா நெல் பயிருக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் பெற்று, தங்களது பகுதியில் உள்ள உழவா் உதவியகத்தில் நிறைவு செய்த விண்ணப்பத்தை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT