புதுச்சேரி

புதுவையில் தளா்வுகளுடன் கூடியபொது முடக்கம் டிச.15 வரை நீட்டிப்பு

DIN

 புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை மாநில அரசுச் செயலரும், மாநில செயலாக்கக் குழு உறுப்பினா் செயலருமான அசோக்குமாா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் நவம்பா் 15-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததையொட்டி, மேலும் சில தளா்வுகளுடன் இந்த பொது முடக்கம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்படும். பெரிய சந்தையில் உள்ள கடைகள் எப்போதும்போல இயங்கலாம்.

கோயில்கள், வழிபாட்டுத்தலங்களில் இரவு 10 மணி வரை பக்தா்கள் வழிபடலாம். திருமண விழாவில் அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்கில் அதிகபட்சம் 20 பேரும் பங்கேற்கலாம். கடற்கரைச் சாலை, பூங்காக்களில் காலை 5 மணி வரை இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்குகள், வணிக வளாகங்கள் 100 சதவீதத்துடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT