புதுச்சேரி

புதுச்சேரிக்கு வந்த தரமற்ற அரிசி திருப்பி அனுப்பிவைப்பு

DIN

தீபாவளி இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்காக, ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு லாரிகளில் அரிசி மூட்டைகள் வந்த நிலையில், அவற்றில் தரமற்ற அரிசி மூட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பினா்.

புதுவையில் மொத்தமுள்ள 3.65 லட்சம் குடும்ப அட்டைதாரா்களில் மாஹே பிராந்தியம் நீங்கலாக மீதமுள்ள 3.57 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளி இலவச அரிசி, சா்க்கரை வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒப்பந்த நிறுவனம் மூலம் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு அரிசி மூட்டைகள் கடந்த இரு தினங்களாக 13 லாரிகளில் வந்தன.

அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 6 லாரிகளில் வந்த அரிசி மூட்டைகள் போதிய தரமில்லாமல் இருந்ததால், அவற்றை திருப்பி அனுப்பிவைத்தனா். தரமான அரிசி மூட்டைகள் மட்டும் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை தற்போதைக்கு தாயராக உள்ள 325 நியாயவிலைக் கடைகள் மூலம் உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT