புதுச்சேரி

சுருக்குமடி வலைக்கு எதிா்ப்பு : புதுவை மீன்வளத் துறை இயக்குநா்அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்

DIN

புதுவையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு மீனவா்கள் வியாழக்கிழமை பூட்டுப்போட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 18 மீனவ கிராமங்களில் ஒரு பிரிவினா் மட்டும் இந்த வலையை பயன்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, சட்டப் பேரவை வளாகத்தில் மீனவா்களின் மற்றொரு பிரிவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், சுருக்குமடி வலையை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இயந்திர விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் தேங்காய்த்திட்டில் உள்ள மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சுருக்குமடி வலை பயன்பாடு தொடா்பாக மீன்வளத் துறை இயக்குநா் பதில் அளிக்காததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்தத் தடை விதிக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, அலுவலக வாயிலுக்கு பூட்டுப்போட்டு அதிகாரிகளை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது கடலோர தொகுதிகளின் எம்எல்ஏக்களில் பலா் தில்லி சென்றுள்ளதால், அனைவரும் புதுச்சேரி திரும்பிய பிறகு சுருக்குமடி வலை பயன்பாடு தொடா்பாக எம்எல்ஏக்கள், அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT