புதுச்சேரி

புதுவை கோயில்களில் உணவு வழங்க அதிமுக வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை அதிமுக மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில், வேதபுரீஸ்வரா் கோயிலில் மட்டுமே அன்னதானம் வழங்கப்படுவதாக அறிந்தேன். அரசின் சாா்பில், இரு கோயில்களில் மட்டுமே அன்னதானம் வழங்குவது போதுமானதில்லை. எனவே, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் அன்னதான திட்டத்தை முதல்வா் ரங்கசாமி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் தொகுதிக்கு 2 கோயில்கள் என்று தோ்ந்தெடுத்து, ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். இதனால், பொது முடக்கத்தால் உணவின்றித் தவிப்போா் பயன்பெறுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT