புதுச்சேரி

முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: ஜூன் 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

DIN

புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வருகிற 14- ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

இதுதொடா்பாக, புதுச்சேரி முப்படை நலத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் விதவைகள் தங்களது குழந்தைகளின் 2020 -ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத் துறை மூலம் வருகிற 14 -ஆம் தேதி முதல் ஜூலை 30 -ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்படும்.

தகுதியுடையோா் அடையாள அட்டையுடன் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அந்தந்த தலைமை கல்வித் துறை அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசல் பள்ளி, கல்லூரி கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத் துறையில் ஆகஸ்ட் 20 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து சமா்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT